Donnerstag, 29. Dezember 2011

இறைவனை நாம் ஏன் வழிபடவேண்டும்


நல்லதொரு மனிதவாழ்வு எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதன் அருமையை உணர்ந்து நாங்கள் வாழத்தலைப்பட்டால் துன்பம் எம்மை நெருங்காது.
பார்ப்பதற்கு கண்கள், கேட்பதற்கு செவிகள், நடக்கக் கால்கள், வேலை செய்யக் கைகள், சிந்தித்து அன்போடும் அறிவோடும் பண்பாக வாழ மூளையையும் கொடுத்த இறைவனை நாங்கள் நன்றியுடன் வழிபடத்தானே வேண்டும்!
இறைவன் எல்லாவற்றையும் படைத்து இயக்குவிக்கின்றான்.
ஒரே வேலை, நேரமே இல்லை என்போம். இந்த சுவாசமும் இதயத்துடிப்பும் எதுவரை இருக்கும் எப்போ நிற்கும் என்று யாருக்கும் தெரியாது.
இந்த உலகம் எவளவோ பெரியது. இதில் ஒவ்வொரு கணமும் கணக்கிட முடியாத நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
எல்லாம் தெரிந்தவன் இறைவன். அவனே எல்லாவற்றையும் படைத்து இயக்குவிக்கின்றான்.
இறைவனின் பேரருள் எங்களுக்கு அவசியமாகும்.
நலமோடு வாழவும் துன்பங்களிலிருந்து எம்மைக் காப்பாற்றவும் நாம் இறைவனை வழிபடவேண்டும். அத்தோடு கற்று முன்னேறி நல் இல்வாழ்க்கை வாழ்வதற்கும் இறைவனின் பேரருள் அவசியமாகும்.
அமைதி பிறக்கிறது
இறைவனைத் தொழுவதால் மனம் தூய்மையடைகிறது. அன்பு, பண்பு, ஒழுக்கம் ஆகிய இன்றியமையாத நற்குணங்கள் மனதில் இடம் பிடிக்கின்றன. இதனால் சினம், கோபம் போன்ற தீய குணங்கள் அடங்கி அமைதி பிறக்கிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவான் முதற்றே உலகு.
--குறள்

Keine Kommentare: